வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்.. அடி தூள்ளான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் ரஜினியை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பழைய படங்களில் மாஸ்சான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் போதும் அதனை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். இதனால் பல இயக்குனர்களும் ஏதாவது ஒரு மாஸ் காட்சியை வைத்து படத்தை வெற்றியடைய வைத்து விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தற்போது ரஜினிகாந்த் மாஸ் காட்சிகள் வேண்டாம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை அறிந்த கோலிவுட் இயக்குனர்கள் அனைவரும் சும்மா இருப்பார்களா. உடனே கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை ரஜினிகாந்திடம் கூறி வந்துள்ளனர். ரஜினிகாந்த் இயக்குனர்களிடம் கதையை கேட்டுவிட்டு கதை சிறப்பாக இருக்கிறது கதாபாத்திரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகளை வாங்கினார். பாண்டியராஜ் ரஜினிகாந்திடம் கதையும் கதாபாத்திரத்தையும் பற்றி கூறியுள்ளார். இதில் ரஜினிகாந்திற்கு விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இவர்களது கூட்டணியில் படம் வெளியாக வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபகாலமாக விஜய் போலவே ரஜினிகாந்தும் இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் ரசிகருக்கு எப்படிப்பட்ட படம் எடுத்தால் பிடிக்கும் என்பது இளம் இயக்குனர்கள் தான் தெரியும் அதனால் இவர்கள் இருவருமே தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

பாண்டியராஜ் படங்கள் சமீபகாலமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. அதனால் இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Trending News