தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை சார்மி கவுர். இவர் தற்போது அமலாக்க குழுவினர் முன்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே திரைத்துறையில் தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தால், சினிமா பிரபலங்கள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனெனில் சினிமா உலகில் போதைப் பொருளின் பயன்பாடு அதிகமாக உள்ளதாக அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்னிலையில் அமலாக்கப்பிரிவு இதுகுறித்த விசாரணையை தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இதற்காக நேற்று தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்நாத், விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். அதன்பின் அவரிடம் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. அவர் மட்டுமல்லாமல் இந்த வழக்கில் ஏற்கனவே 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.
இவர்களிடமிருந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் இன்று வரையிலான வங்கிப் பரிவர்த்தனை பற்றிய முழு விவரத்தையும் சேகரிக்கப்பட்டது. அதேபோல் இன்று பூரி ஜெகன்நாத்தின் சினிமா தயாரிப்பாளராக இருந்து வரும் நடிகை சார்மி அமலாக்க பிரிவு முன் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
சார்மி ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு முன்பு இதேபோன்றதொரு வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, போலீஸ் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.
அதன்காரணமாக தற்போது சார்மியை பெண் போலீஸ்காரர்களின் மேற்பார்வையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரமானது தற்போது தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.