வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்.. வைரலாகும் அதிதி போஸ்டர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தில் சங்கர் உள்ளார். இவரது படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அதே போல் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் சங்கர் இயக்கியுள்ளார். தற்போது சங்கரின் மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் முத்தையா கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு விருமன் என பெயர் வைத்துள்ளனர். நேற்று இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி இடம்பெற்றுள்ள விருமன் பட போஸ்டரை நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் முதல் படமே முன்னணி நடிகர் கார்த்தி படம் என்பதால் நிச்சயம் இப்படம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

aditi-shankar-viruman
aditi-shankar-viruman

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் முத்தையா இரண்டாவது முறையாக இணைந்துள்ள விருமன் படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலமாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்க உள்ளனர். மேலும் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சர்தார் படத்தை முடித்த பின்னர் கார்த்தி படத்தில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Trending News