தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் தான் காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு. இவர் இருபத்தி நான்காம் புலிகேசி பட பிரச்சினையின் காரணமாக லைக்கா மற்றும் பிரபல இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இனி எந்தப் படங்களிலும் வடிவேலு நடிக்க கூடாது என்று ரெக்கார்ட் கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் இந்த பிரச்சனையை உலகநாயகன் கமலஹாசன் சுலபமாக கையாண்டு தீர்த்து வைத்துள்ளார் என்று இயக்குனர் வி சேகர் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏனென்றால் சினிமாவின் மூலம் தனது உடல் மற்றும் முக பாவனையாலும் மதுரை பேச்சினாலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வித்தைக்காரர் தான் வடிவேலு. அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று உலகநாயகன் கமலஹாசன்,
லைக்கா மற்றும் ஷங்கர் இருவரிடமும் பேசி பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளார். மேலும் படத்திற்கு ஏதாவது நஷ்டயீடு வேண்டுமானாலும் அதை வடிவெலுவிடம் பெற்று தருகிறேன்.

அவரை விட்டுவிடுங்கள் வேறு படத்தில் அவர் போய் நடித்துக் கொள்ளட்டும் என்று வடிவேலுவிற்கு ஏற்பட்ட ரெக்கார்ட் பிரச்சினையை கமலஹாசன் தீர்த்து வைத்துள்ளார்.
பல வருடங்களாக கமலஹாசனும் வடிவேலும் சேர்ந்து நடிக்காவிட்டாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வடிவெலுக்கு கமலஹாசன் உதவி புரிந்தது சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் வி சேகர் பேட்டியளித்த வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.