சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2021 SIIMA விருது! சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் விருது யாருக்கு?

இந்திய அளவில் மதிப்புமிக்க சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இன்னிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விருது விழா நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது, எஜமானா என்ற கன்னட படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது, ஜெர்சி படத்தில் நடித்த நடிகர் நானி க்கு கிடைத்தது. சிறந்த தெலுங்கு இயக்குனருக்கான விருது மகரிஷி படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பெற்றார். இவர்தான் தளபதி விஜய்யின் 66 வது படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

makesh-babu-cinemapettai
mahesh-babu-cinemapettai

மேலும் சிறந்த மலையாள நடிகருக்கான விருது, நடிகர் நிவின் பாலிக்கு மூத்தோன் படத்திற்காக கிடைத்தது. அத்துடன் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, நடிகர் யோகிபாபு கிடைத்தது. மேலும் சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருது, மகரிஷி படத்தில் நடித்ததற்காக நடிகர் மகேஷ் பாபுக்கு கிடைத்ததுத்தது. சிறந்த அறிமுக நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ் பெற்றார்.

Ken-Karunas-cinemapettai

சிறந்த மலையாள வில்லன் விருது நடிகர் ஷைன் டாம் சாக்கோ இஷ்க். இவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் சிறந்த தமிழ் இயக்குனருகன விருது அசுரன் திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் பெற்றார். அதேபோல் அசுரன் படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்களையே’ பாடலை சிறப்பாக பாடியதற்காக பாடகி சைந்தவிக்கு சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். அத்துடன் அசுரன் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது.

Shine-Tom-Chacko-cinemapettai

சிறந்த துணை நடிகைக்கான விருது மகாமுனி படத்தில் நடித்த இந்துஜா ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்தது .

மேலும் சிறந்த அறிமுக தயாரிப்பாளருகான விருது ஆடை படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் விருது, தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு கிடைத்தது.

rashmika-cinemapettai
rashmika-cinemapettai

மேலும் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கைதி படத்தில் நடித்த அர்ஜுன் தாசுக்கு கிடைத்தது.அதே படத்தில் நடித்த ஜார்ஜ் மரியானுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது. இவ்வாறு 2021 சைமா விருதுகளைப் பெற்ற திரைத்துறை பிரபலங்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Trending News