ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கிரிக்கெட்டில் இதுவரை பலர் அறியாத 5 விதிமுறைகள்.. அதன்படி அவுட்டாகியும் விளையாடிய டெண்டுல்கர்.!

உலகெங்கும் கால்பந்து போட்டிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு கிரிக்கெட் விளையாட்டிற்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த விளையாட்டிற்கு என்று பல விதிமுறைகள் உண்டு, சில விதிமுறைகள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்னும் சில விதிமுறைகள் துரதிஸ்டவசமாக  நடக்கும் பட்சத்தில் தான் நமக்கு தெரியவரும். அப்படி கிரிக்கெட்டில் நாம் அறியாத ஐந்து விதிமுறைகள்.

அப்பீல் விதிமுறை: ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும் பட்சத்தில், பந்து வீச்சாளர்களோ அல்லது எதிரணி வீரர்களோ நடுவரிடம் முறையிட்டால் மட்டுமே நடுவர் அவுட் கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் அப்பீல் செய்யவில்லை என்றால் அதை அம்பயர் அவுட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

Appeal-Cinemapettai.jpg
Appeal-Cinemapettai.jpg

ஆப்ஜக்ட் ஹிட்ட்டிங் விதிமுறை: பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தானது மைதானத்தின் மேற்கூரையையோ அல்லது சுற்றிக்கொண்டிருக்கும் ஸ்பைடர் கேமராவையோ அல்லது வேறு ஏதும் பொருளில் பட்டுவிட்டால், அது டெட் பால் என்று அறிவிக்கப்படும்.

Object-Cinemapettai.jpg
Object-Cinemapettai.jpg

கால் பேக் விதிமுறை: ஒரு பேட்ஸ்மேன் நியாயமற்ற முறையில் அவுட்டாகி வெளியே செல்லும் போது, எதிரணி கேப்டனின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீண்டும் வந்து விளையாடலாம். இதனை கால்பேக் விதிமுறை என்று கூறுவார்கள். சச்சின் டெண்டுல்கரை ஒரு முறை ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ரிக்கி பாண்டிங் இப்படி விளையாட அனுமதித்தார்.

Call-Back-Cinemapettai.jpg
Call-Back-Cinemapettai.jpg

 

டைம் அவுட் விதிமுறை: ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி வெளியே செல்லும்போது அடுத்து விளையாட வரும் பேட்ஸ்மேன் மூன்று நிமிடத்திற்குள் மைதானத்திற்குள் வந்துவிடவேண்டும் அப்படியே அவர் மூன்று நிமிடம் தாண்டும் பட்சத்தில் அவர் அவுட் என்று அறிவிக்கப்படும். இதுதான் டைம் அவுட் விதிமுறை.

Timeout-inemapettai.jpg
Timeout-inemapettai.jpg

பெனால்டி ரன் விதிமுறை: பில்டிங் செய்யும் அணியின் விக்கெட் கீப்பர் பின்புறம் வைத்திருக்கும் தலைக்கவசத்தின் பந்து படும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி விதியின் அடிப்படையில் அளிக்கப்படும்.

Penaulty-runs-Cinemapettai.jpg
Penaulty-runs-Cinemapettai.jpg

Trending News