திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரோஜா சீரியலில் இருந்து விலகும் முன்னணி கதாபாத்திரம்.. இனிமேல் வரமாட்டேன் என பதிவிட்ட சோகம்

டி ஆர் பி இல் முதலில் இருப்பது விஜய் டிவி யின் பாண்டியன் ஸ்டோர் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் வெங்கட் , இவருக்கு ஜோடியாக ஹேமா நடித்துள்ளார். இவர்களது காம்போ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணன், தம்பிகள் என கூட்டு குடும்பத்தை வைத்து எடுக்கப்பட்ட மெகா தொடர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெங்கட் நிறைய சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள்,ஜீ தமிழில் புகுந்த வீடு,சன்டிவியில் ஆண்பாவம்,ஜெயா டிவியில் மாயா, புதுயுகத்தில் அக்னி பறவை என எல்லா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பு தத்ரூபமாக இருக்கும். விஜய் டிவி ஜோடி நம்பர் 1 இல் தன் மனைவி அஜந்தாவுடன் நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவர்களுக்கு டேஜு என்ற பெண் குழந்தை உள்ளது.

venkat
venkat

வெங்கட் ஷூட்டிங் முடிந்தவுடன் தன் சக நடிகர், நடிகைகளுடன் வீடியோ எடுத்த சோசியல் மீடியாவில் பதிவிடுவார். தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ரோஜா சீரியலில் இருந்து வெங்கட் விலகப் போவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அதில், சிலருக்கு இது சோகமாக செய்தியாக இருக்கலாம், சிலருக்கு இது நல்ல செய்தியாக இருக்கலாம். ரோஜா சீரியலில் அஸ்வின் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி. நான் ரோஜா தொடரில் இருந்து விலகுகிறேன். ஆனால் ஜீவாவா என்ன நீங்க பார்த்துக்கிட்டே இருக்கலாம். உங்களுடைய லவ் அண்ட் சப்போர்ட்டுக்கு நன்றி. உங்கள் நண்பன் வெங்கட் என்று பதிவிட்டுள்ளார்.

Trending News