ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டிஆர்பி-யில் முதலிடத்திலிருந்த பாரதிகண்ணம்மாவை துரத்திய சன்டிவி! 2-வது இடத்திற்கு வந்த சென்டிமென்ட் சீரியல்

சின்னத்திரையில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய மூன்று சேனல்களுக்கும் இடையேதான் டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது.

எனவே சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் ரோஜாவின் அம்மா செண்பகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பி வந்த காட்சி ஒளிபரப்பான நிலையில், ரோஜா சீரியல் சென்ற வாரம் விறுவிறுப்பாக சென்றது. இதனால் ரசிகர்களும் அந்த சீரியலை ஆர்வத்துடன் கண்டதால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் இரண்டாவது இடத்தை விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்துள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோரில் திடீரென்று லஷ்மி அம்மா மரணமடைந்த காட்சி ஒளிபரப்பு செய்ததால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அழுகுரல் பார்ப்போரை சென்டிமென்டில் ஆழ்த்தியது.

roja-serial
roja-serial

மூன்றாவது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலுக்கு கிடைத்துள்ளது. சென்ற வாரம் சந்தியா வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட காட்சியும், அவர் விபத்தில் சிக்கிக் கொண்டு உயிர்பிழைத்த காட்சியின் விறுவிறுப்பாக சென்றதால், இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

pandian-stores1
pandian-stores

மேலும் பாரதிகண்ணம்மா சீரியலின் விறுவிறுப்பு குறைந்ததாலும், பாரதி திருந்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வெளியிடப்பட்ட ப்ரோமோ பொய்யானது ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதனால் முந்தைய வாரம் டாப்-5 லிஸ்டில் இருந்த பாரதி கண்ணம்மா பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் டாப் லிஸ்டில் பாரதி கண்ணம்மா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News