பாகிஸ்தான் நாட்டிற்கு எப்பொழுதும் இந்திய நாட்டை வம்பிழுத்து பார்ப்பதில் ஒரு அளவு கடந்த சந்தோஷம். இது அந்த நாட்டிற்கு மட்டுமல்ல, அங்கே இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் ரொம்பவே பொருந்தும். இப்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, இந்தியாவை வம்பிழுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்து கொண்டு நாடு திரும்பியது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ராவல்பிண்டி மைதானத்தில் நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி ரத்தானது. அதன்பின் தொடர் முழுவதையும் ரத்து செய்தது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம். வெடிகுண்டு மிரட்டலுக்கு பாகிஸ்தான் நாடு மறுப்பு தெரிவித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியை பத்திரமாக நாட்டிற்கு வழி அனுப்பியது.
தற்போது அந்த அணியின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, நியூசிலாந்து அணி மன்னிக்க முடியாத தவறு செய்ததாகவும், படிப்பறிவு உள்ள நாடு இந்திய நாட்டை பின்பற்றாது எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்ரிடியின் இந்த பேச்சு இந்திய நாட்டினரை மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களையும் கோபமடையச் செய்தது. எப்பொழுதுமே இந்தியாவை தர குறைவாக பேசி வாங்கிக் கொள்வார்கள் பாகிஸ்தான் நாட்டினர்.
வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ஹர்பஜன்சிங் போன்ற வீரர்கள் காதுக்கு இந்த விஷயம் இன்னும் செல்லவில்லை. அவர்களுக்கு தெரிய வருகையில் நிச்சயம் சாகித் அப்ரிடி வாங்கிக் கட்டிக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.