திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உலக கோப்பை போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கமா? அவருக்கு ஆப்பு வைக்க போவது இவர்தானா

சமீப காலமாகவே ஹர்திக் பாண்டியாவால் எல்லா போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. காரணம் அவருடைய முதுகு வலி. இப்பொழுது இந்திய அணியில் அவர் ஒரு முழு நேர பேட்ஸ்மேன் ஆகவே பார்க்கப்படுகிறார். அவருக்கு முதுகில் செய்த ஆபரேஷன் காரணமாக, மருத்துவர்கள் அவரை பந்து வீசுவதற்கு அனுமதிப்பதில்லை.

5வது பந்து வீச்சாளர் அவசியம் என்பதால் ஓரிரு போட்டிகளில், 1 ஓவர், 2 ஓவர்கள் வீசிய நிலையில் தமது பந்துவீச்சை முடித்துக் கொள்வார். இதனால் அவரிடம் இருந்து இந்திய அணி ஒரு முழுமையான ஒத்துழைப்பை பெற முடியவில்லை. பல போட்டிகளில் ஓய்வெடுத்த படி உள்ளார்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சரிவர ஆட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளிலும் பந்துவீசிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி, செலக்ஷன் கமிட்டி பாண்டியா விஷயத்தில் ஒரு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

Takur-Shreyas-Cinemapettai.jpg
Takur-Shreyas-Cinemapettai.jpg

ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கும் வகையில் இருபது ஓவர் உலககோப்பை போட்டி தொடரிலும் அவரை ட்ராப் அவுட் செய்யப்போவதாக பேச்சுக்கள் வருகிறது. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரும், ஷர்துல் தாகூரும் அணியில் பங்கு பெறுவதற்காக தயாராக உள்ளனர்.

Trending News