ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அஸ்வினுக்கு ஏன் இந்த கோபம்.! விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் காரணமா.? ரசிகர்கள் கொந்தளிப்பு!

இந்திய அணியில் சீனியர் வீரர்கள் என்றால் அது விராத் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா,மற்றும் ஷிகர் தவான். தற்போது விராட் கோலி மற்றும் அஸ்வின் இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்று அரசல், புரசலாக கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் கோலி மற்றும் ரோஹித் இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டது.

நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் அஸ்வின் அணியில் இருந்தும்கூட, ஒரு போட்டியிலும் வாய்ப்பளிக்கவில்லை கேப்டன் விராட் கோலி.

அதுமட்டுமின்றி அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அணித் தேர்வில், அஸ்வினுக்கு பதிலாக யூஸ்வேந்திர சகலை எடுக்குமாறு கோலி வலியுறுத்தியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட அஸ்வின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ஆக்ரோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கொல்கத்தா அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் டீம் சவூதி மற்றும் இயான் மோர்கன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் தினேஷ் கார்த்திக் வந்து அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பினார்.

Aswin-fight-Cinemapettai.jpg
Aswin-fight-Cinemapettai.jpg

அஸ்வின் இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணம் விராட் கோலி மீதுள்ள அதிருப்திதான் என்று கூறுகிறார்கள்.ஆனால் அஸ்வினின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாகத்தான் அணிக்குள் எடுப்பதற்கு விராட் கோலி தயங்குகிறார் என்றும் பேசப்படுகிறது.

Trending News