ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நடிகர்களுக்கு நிகராக விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் சமந்தா.. விலையைக் கேட்டு ஆடிப் போன ஹீரோக்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பின்னர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சமந்தாவுடன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று  படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேருந்தின் படிக்கட்டில் நிற்பது போலவும் அவருக்கு முன்னால் நயன்தாராவும், சமந்தாவும் நிற்பது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியானது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சத்யா திரைப்படத்தில் கமல்ஹாசனும், அமலாவும் “வலையோசை கலகலவென” என்ற பாடல் காட்சியை போன்றே இருந்தது.

திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பது வாடிக்கையான ஒன்று. அதில் சமந்தாவிடம் ஏராளமான வகை கார்கள் உள்ளன. அந்த கார்களின் விலை பல கோடிகளை தாண்டும். அவற்றின் விவரம் இதோ,

Range Rover Vogue விலை-2.26 கோடி, Mercedes Benz G63 AMG விலை-2.3 கோடி, BMW 7 Series விலை-1.34 கோடி, Porshe Cayman GTS விலை-1.19 கோடி, Audi Q7 விலை-80 லட்சம், Jagur XF விலை-70 லட்சம்.

samantha
samantha

மேலும் சமந்தா பெற்றோரை இழந்து 7 சகோதரிகளுடன் கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு 12 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்தார் என்பது பெருமைக்குரியது.

சமந்தா சில நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவ்ளோ வகையான கார்கள் வைத்திருந்தாலும் சைக்கிள் ஓட்டுவதையும் ஒரு பொழுது போக்காக வைத்துள்ளார்.

Trending News