சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வாடகை கார் ஓட்டும் வல்லவன் பட நடிகை.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த காதல் சுகுமார்

சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் வல்லவன். இப்படத்தில் நயன்தாரா சிம்புவை வைத்து கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வல்லவன் படத்தின் மூலம்தான் சந்தானத்திற்கு ஓரளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு வல்லவன் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுமே பட வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தனர். சிம்பு இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கவில்லை. அதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறி வந்தனர்.

வல்லவன் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது ஓலா கார் ஓட்டும் விஷயத்தை காதல் சுகுமார் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். அதாவது வல்லவன் படத்தில் சந்தானம் ஒரு காகித பேப்பரை தூக்கி எறிவார், அதை பார்த்துவிட்டு அந்த பெண் என்ன இதுல ஒண்ணுமே இல்லை என கூறுவார் இந்த காமெடி படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

lakshmi kadhal sukumar
lakshmi kadhal sukumar

ஆனால் இந்தக் காட்சியில் நடித்த லட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். எனக்கே இவரைப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஒரு காட்சிக்கு மட்டும் நடிப்பதற்காக இவர் வந்துள்ளதாகவும் அப்போதுதான் இவரை பற்றி தனக்கு தெரிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவருடைய திறமைக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விஷயம் சிம்பு காதிற்கு சென்றால் கண்டிப்பாக சிம்புவால் ஏதேனும் உதவிகள் செய்ய முடியும் எனவும் இல்லையென்றால் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஒரு பெண்ணால் இவ்வளவு தைரியமாக வாழ்க்கை வாழ்வது பலருக்கும் ஆச்சரியமாக இருப்பதாகவும். மேலும் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் பல சாதனைகள் படைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Trending News