ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

உடம்பில் சில குறைகளுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள். போலியோ அட்டாக்கினாள் பாதிக்கப்பட்ட இந்திய வீரர்!

விளையாடுவதற்கு கை கால்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நேர்த்தியான உடலமைப்பு வேண்டும். ஆனால் சிறுவயதில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த சிறு தவறினால் ஏற்படும் நிலைக்கு நாம் பெரிய பதில் சொல்ல வேண்டியதிருக்கும். அந்தவகையில் சில வீரர்கள் அதற்குப் பெரும் விலையை கொடுத்துள்ளனர். அப்படி சில குறைகள் இருந்தும் விளையாட்டில் ஜொலித்து, பல சாதனைகளைப் படைத்து, முழு அர்ப்பணிப்பையும் கொடுத்த 5 வீரர்கள்

மார்ட்டின் கப்டில்: நியூசிலாந்து அணியில் முதலாவதாக இறங்கி அதிரடியாக விளையாடுபவர் கப்டில். இவர் சிறுவயதில் செய்த தவறினால் தன் கால்களில் மூன்று விரல்களை இழந்தவர். இவர் தனது கவனக்குறைவால் குழிதோண்டும் வண்டியின் சக்கரத்திற்கு அடியில் கால்களை விட்டு விரல்களை இழந்துவிட்டார்.

Guptil-Cinemapettai.jpg
Guptil-Cinemapettai.jpg

வக்கார் யூனிஸ்: ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இரட்டையர்களை போல பந்து வீசக்கூடிய வீரர்கள். மற்ற அணியினரை இவர்களின் பந்துவீச்சின் மூலம் கதிகலங்க செய்வார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வக்கார் யூனிஸ்ற்கு சுண்டுவிரல் கிடையாது. இவர் சிறுவயதில் குட்டையில் குளிக்கும் போது சுண்டுவிரலை இழந்தவர்.

Pinky-Finger-Cinemapettai.jpg
Pinky-Finger-Cinemapettai.jpg

பேட் கம்மின்ஸ்: ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளராக இருக்கும் கம்மின்ஸின் வலது கையின் நடு விரல் சிறிது வெட்டப்பட்டது போல் இருக்கும். இதனால் அவரின் ஆட்காட்டி விரலும், நடு விரலும் ஒரே அளவில் இருக்கும். சிறு வயதில் தவறுதலாக கம்மின்ஸின் கை விரலை கதவுகளுக்குள் வைத்து அவரது சகோதரி பூட்டி விட கதவின்அழுத்தத்தால் விரலின் ஒரு பகுதி துண்டாகி விட்டதாம்.

Patcummins-Cinemapettai.jpg
Patcummins-Cinemapettai.jpg

 

மன்சூர் அலிகான் பட்டோடி: இந்திய கிரிக்கெட் அணி கண்டெடுத்ததில் ஒரு தலை சிறந்த ஆட்டக்காரர் பட்டோடி. இவர் ஒரு முறை ஏற்பட்ட கார் விபத்தினால் தனது வலது கண் பார்வையை இழந்தவர். இடது கண் பார்வை ஒன்றினால் மட்டுமே விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தினாராம்.

Pattodi-Cinemapettai.jpg
Pattodi-Cinemapettai.jpg

பகவத் சந்திரசேகர்: சிறுவயதில் போலியோ அட்டாக்கினாள் வலது கை பாதிப்படைந்தவர். இந்திய அணி தனது முதல் வெற்றியை இங்கிலாந்து அணிக்கு எதிராக வென்றதற்கு முழு காரணம் பகவத் சந்திரசேகர். அந்த போட்டியில் வெறும் 38 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்து இங்கிலாந்து அணியை 101 ரன்களுக்கு சுருட்டினார். இவர் தனது கை இப்படி இருப்பதினால் எதிரணியினரை சுலபமாக குழப்பமடைய செய்ய முடியும் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த கைகளை வைத்துக்கொண்டு தூரத்திலிருந்து கொண்டு கூட நேர்த்தியாக விசுவாராம்.

Bs-Chandrasekar-Cinemapettai.jpg
Bs-Chandrasekar-Cinemapettai.jpg

Trending News