திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

175 நாட்களை தாண்டி மரண ஹிட்டடித்த கமலின் 6 படங்கள்.. இந்தியளவில் திரும்பி பார்க்க வைத்த உலகநாயகன்

உலகநாயகன் கமலஹாசன் பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பவர். கருப்பு வெள்ளை காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சிகப்பு ரோஜா: பாரதிராஜா இயக்கத்தில் 1978இல் வெளியான திரைப்படம் சிகப்பு ரோஜா. இளம் பெண்களால் பாதிக்கப்பட்ட சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இன்றுவரை கமலின் சிறப்பான திரைப்பட வரிசையில் இப்படமும் இடம் பெற்றிருக்கும். இப்படம் கமலை காதல் இளவரசனாக காண்பிக்கப்பட்டது.

குரு: 1980-ல் வெளியான குரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.ஐ வி சசி இப்படத்தின் இயக்குனர். இப்படத்தில் கமல் குரு, அசோக் என இரு வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ஸ்ரீலங்காவில் 100 நாட்கள் தாண்டி திரையரங்குகளில் ஓடியது.

மூன்றாம் பிறை: பாலுமகேந்திரா இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மூன்றாம் பிறை.1982இல் வெளியான திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்து இருப்பார். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

அபூர்வ சகோதரர்கள்: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, ஸ்ரீதேவி, நாகேஷ், ஜனகராஜ் என பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். குள்ளமாக நடித்திருக்கும் கமலின் அப்பு கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சகலகலா வல்லவன் பட வசூலை முறியடித்தது.

approva-kamal
approva-kamal

தேவர் மகன்: பரதன் இயக்கத்தில் 1992இல் தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் தான் தேவர் மகன். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கௌதமி, ரேவதி, நாசர், வடிவேலு என்று பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் சிவாஜி கணேசன் பெரிய தேவராக அவர் மகன் கமலஹாசன் சக்திவேல் ஆக நடித்திருந்தார். இப்படம் பல பிரிவுகளில் 5 தேசிய திரைப்பட விருதை வென்றது.

இந்தியன்: 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன்.இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

indian2
indian2

Trending News