சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தீபாவளிக்கு வந்தா மாநாடு கதி அதோகதிதான்.. வருத்தத்தில் தயாரிப்பாளர்

சிம்பு ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி தீபாவளி வெளியீடாக வர இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் போன்றவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

சிம்புவும் தீபாவளி என்ற மாநாடு படம் வெளியாவதை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். ஆனால் மாநாடு படத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் ரஜினியின் அண்ணாத்த படம் வருகிறது.

அதனைத் தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எனிமி என்ற படமும் தீபாவளியை குறி வைத்து வெளியாக உள்ளது. ஏற்கனவே 50 சதவீத பார்வையாளர்களை வைத்து படம் ஓட்ட வேண்டிய நிலைமை.

இந்நிலையில் அனைத்து படமும் ஒரே நாளில் வெளியானால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் முன்கூட்டியே உசாரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை தீபாவளியில் இருந்து பின்வாங்கி நவம்பர் 25ஆம் தேதிக்கு சென்றுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிவிப்பில் மாநாடு படம் கண்டிப்பாக தீபாவளி அன்று வெளியான பெரிய பொருளாதாரச் சிக்கல் மற்றும் வசூலில் அடிவாங்கும் என்பதையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

vhouse-maanadu-venkat-prabhu-simbu
vhouse-maanadu-venkat-prabhu-simbu

இருந்தாலும் சிம்பு மற்றும் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் தீபாவளிக்கு வர முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் படம் தரமாக வந்திருப்பதால் கண்டிப்பாக எப்போது வந்தாலும் தாறுமாறு ஹிட் அடிக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News