ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

T-20 உலகக் கோப்பை யாருக்கு? இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகம் கூறும் முன்னாள் நட்சத்திரங்கள்

20 ஓவர் உலக கோப்பை தொடரில் தற்போது பயிற்சி போட்டிகளும், லீக் போட்டிகளும் நடந்து வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் சூப்பர் 12 போட்டிகள், அக்டோபர் 24 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. முதல் நாளே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் பலமான அணிகள் என்று பார்த்தால் குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும், குரூப் இரண்டில் இந்தியா, நியூசிலாந்து, மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தான். தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

Australia-Cinemapettai.jpg
Australia-Cinemapettai.jpg

துபாயில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளை காண்பதற்கு, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் சூப்பர்12 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் டிக்கெட்டுகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காலியாகி விட்டன.

நடந்து முடிந்த பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை, இந்தியா அணி அசால்டாக வென்றுள்ளது. அது மட்டுமின்றி இந்த போட்டிகளில் இந்தியா தனது முழு பலத்துடன் இறங்கவில்லை. சில வீரர்களை முக்கியமான போட்டிகளில் பங்கேற்பதற்காக மறைத்து வைத்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும், மற்ற அணிகளை விட பலம் வாய்ந்த அணியாகவே வலம் வருகிறது. மற்ற அணிகள் அனைத்தும் “form out”காரணமாக தற்போது சொதப்பி வருகிறது. இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் அணியாக இங்கிலாந்தை மட்டும்தான் கூறுகிறார்கள்.

Virat-Cinemapettai-1.jpg
Virat-Cinemapettai-1.jpg

இங்கிலாந்து அணியை இந்திய அணி வென்றுவிட்டால் உலக கோப்பையை தட்டிச் செல்வது உறுதி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஆர்தர்டனும், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆடம் கில்கிறிஸ்ட்டும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Stars-Cinemapettai.jpg
Stars-Cinemapettai.jpg

Trending News