திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை.. சன் டிவி சீரியலில் அம்மனாக புது அவதாரம்.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒருசில நாடகங்கள் மட்டுமே பார்வையாளர்களை திருப்திபடுத்தி வருகிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அன்பே வா நெடுந்தொடர் டிஆர்பி ரேட்டிங்கிளும் நல்ல இடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது.

சீரியல்களில் அவ்வப்போது முக்கிய பிரபலங்களை வைத்து சில கெஸ்ட் பர்ஃபாமென்ஸ் காட்சிகளை எடுத்து சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்வர். அவ்வாறு புதுவிதமான காட்சிகள் இடம் பெறும் பொழுது சீரியலிலும் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தி நாடகத்தை சுவாரஸ்யமாக்குவர்.

தற்போது அன்பே வா சீரியலில் பிரபல 60’ஸ் நடிகை கே.ஆர் விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவரின் வருகையை அறிந்த அன்பே வா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை இனிஷியலுடன் அழைக்கப்படக்கூடிய நடிகைகளில் கேஆர் விஜயாவும் ஒருவராவார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடம், காதல் மன்னன் ஜெமினி கணேசனுடனும் நடிகை கேஆர் விஜயா இணைந்து நடித்துள்ளார். அத்துடன் நடிகர் முத்துராமன், நடிகர் ஜெய்சங்கர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள நடிகை கேஆர் விஜயா.

தற்போது அன்பே வா நாடகத்தில் கதாநாயகனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது கணவரை காப்பாற்ற கோரி கதாநாயகி கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் வேண்டுகிறார். இது போன்ற காட்சிகளுடன் அன்பே வா சீரியல் நகர்ந்து வருகிறது.

இதில் கதாநாயகிக்கு பதில் அளிக்கும் அம்மனாக அன்பே வா சீரியலில் களமிறங்குகிறார் நடிகை கேஆர் விஜயா. சமீபகாலமாக தனது திரைப் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த கேஆர் விஜயா சன் டிவியின் அன்பே வா நாடகத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இவரது வருகையைத் தொடர்ந்து அன்பே வா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை அள்ளும் என்று சின்னத்திரை வட்டாரம் தெரிவிக்கிறது.

kr-vijaya-cinemapettai
kr-vijaya-cinemapettai

Trending News