ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அதிகமுறை முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய வீரர்கள்! நெருங்க முடியாத இடத்தில் முதல் வீரர்!

பொதுவாக 50 ஓவர் போட்டிகளில் நிதானமாகத்தான் ஆடுவார்கள் ஆனால் முதலாவதாக இறங்கும் அதிரடி ஆட்டக்காரர்கள் ‘பவர் பிளே’ எனப்படும் ஓவர்களில் அடித்து விளையாடி ஆட்டத்தின் ரன் விகிதத்தை ஏற்ற முயற்சி செய்வார்கள். அப்படி இறங்கும் வீரர்களில், ஆட்டம் தொடங்கிய முதல் பந்தை அதிகமுறை பவுண்டரிக்கு விளாசியவர்களை இதில் பார்க்கலாம்,

5. கிறிஸ் கெயில் : ஜமைக்காவின் பீஸ்ட் என்று இவரை செல்லமாக அழைப்பார்கள். கிட்டத்தட்ட 250 முறை முதல் பந்தை சந்தித்த இவர் வெறும் 5 முறை மட்டுமே பவுண்டரிக்கு விளாசியுள்ளார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன கெயில் 5 முறை மட்டுமே முதல் பந்தை அடித்து உள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Gayle-Cinemapettai-1.jpg
Gayle-Cinemapettai-1.jpg

4. தமீம் இக்பால்: பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரராக கிட்டத்தட்ட 150 போட்டிகளில் இக்பால் களமிறங்கியுள்ளார். அதில் 5 முறை முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசியுள்ளார்.

Tamil-Cinemapettai.jpg
Tamil-Cinemapettai.jpg

3. ஆடம் கில்கிறிஸ்ட்: மிகச்சிறந்த கீப்பர்களுள் ஒருவரான கில்கிறிஸ்ட் 8 முறை முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசியுள்ளார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 162 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adam-Cinemapettai.jpg
Adam-Cinemapettai.jpg

2. ஷேன் வாட்சன்: சென்னை அணிக்காக விளையாடி வரும் வாட்சன் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். இவரும் ஆடம் கில்கிறிஸ்ட்டை போல் 8 முறை முதல் பந்தை பவுண்டரி அடித்துள்ளார்.இவர்தம் அணிக்காக 77 முறை முதல் பந்தை சந்தித்துள்ளார்.

watson-Cinemapettai.jpg
watson-Cinemapettai.jpg

1. விரேந்தர் சேவாக்: எப்பொழுதுமே எதிரணி பவுலர்களை பயமில்லாமல் சந்திக்கவும் ஒரே வீரர் இந்தியாவைச் சேர்ந்த சேவாக். இவர் 124 முறை இந்தியாவிற்காக முதல் பந்தை சந்தித்து 20 முறை பவுண்டரிகளை விளாசிய உள்ளார். இவரை கண்டு எதிரணி வீரர்கள் ஒரு அச்சத்துடனேயே இருப்பார்கள். தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியை எளிதாக மாற்றிவிடும் வீரர்.

Virender-Cinemapettai.jpg
Virender-Cinemapettai.jpg

Trending News