சின்னத்திரையை பொருத்தவரை எப்பொழுதும் டிஆர்பில் முதலிடம் பிடி பிடிப்பது பாரதிகண்ணம்மா மற்றும் ரோஜா சீரியல்கள்தான். இந்த இரண்டு சீரியல்களையும் ஓரங்கட்டி முதலிடம் பிடித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தனத்தின் பிரசவத்தில் இருந்து பயங்கர விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரத்தில் தனத்தின் குழந்தை புதிதாக வந்தவுடன் மீனாவும்,மீனா குழந்தையும் ஓரம் கட்டப் படுவது போல் அமைந்துள்ளது.
இது மக்களின் மனங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மக்களின் ஆர்வமும் அதிகமாகிறது. இந்த எதிர்பார்ப்பின் உச்சமே பாண்டியன் ஸ்டோர் சீரியலின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.
மேலும் எப்பொழுதும் டிஆர்பில் முதலிடத்தை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவும், சன் டிவியின் ரோஜாவுமே தட்டி தூக்கி, இந்த முறை எதிர்பாராத விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதாவது டாப் 10 இடத்தில் உள்ள சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் என்னவென்றால், முதலிடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 9.72 புள்ளிகளைப் பெற்று தட்டிச்சென்றது. இரண்டாம் இடத்தில் வானத்தைப்போல என்னும் சன் டிவியின் சீரியல் 9.58 புள்ளிகளுனும், மூன்றாம் இடத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் 9.2 5 புள்ளிகளுடன், நான்காமிடத்தில் சுந்தரி சீரியல் 9.07 இடத்திலும், பல தடைகளுக்கு பிறகு ஐந்தாம் இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 9.02 புள்ளிகளுடன் பிரபல ரோஜா சீரியல் ஆறாம் இடத்திற்கு தள்ளி முன்னிலை வகிக்கிறது.
இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களும் டிஆர்பியை அள்ளிக் குவித்து சாதனை படைக்கின்றன என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.