வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வசூலில் விஜய், அஜித்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்.. டாக்டர் வேற லெவல் சம்பவம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் டாக்டர். டாக்டர் படம் இவ்வளவு பெரிய வெற்றியை குவிக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தியேட்டர்களில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழில் மட்டுமல்ல படம் வெளியான ஆந்திரா, கேரளா என அனைத்து இடங்களிலும் டாக்டர் வரவேற்பு சிறப்பாக இருப்பதாகவும் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக தேடி வருவதாகவும் தொடர்ந்து விமர்சனங்களும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சியை இந்த படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று பெற்றது எனவும் கூறுகின்றனர்.

பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் நடிகர்களை 50 கோடி வசூலைத் தொட்ட தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் அசால்டாக சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 90 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் தற்போது வரை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் கூட விஜய்யின் மாஸ்டர் பட வசூலை வெளியான கொஞ்ச நாட்களிலேயே ஓரம்கட்டி விட்டதாக செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.

இன்றைய தேதிக்கு ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் மட்டுமே தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் கொடுக்கும் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்த உயரத்தை அடைய குறைந்தது 20 வருடம் எடுத்துக்கொண்டனர். ஆனால் சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சி அப்படி அல்ல, வெறும் 9 வருடங்களில் 100 கோடி வசூல் கொடுக்கும் வசூல் நாயகனாக மாறிவிட்டார்.

doctor-sivakarthikeyan
doctor-sivakarthikeyan

விரைவில் டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை கடந்து விடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது கூடுதல் தகவல். டாக்டர் படத்தை வைத்து பார்க்கையில் சிவகார்த்திகேயன் சினிமாவின் அடுத்த வசூல் நாயகன் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

Trending News