ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

யார் அந்த 6 பேர்? நியூசிலாந்து தொடருக்காக தயாராகிக் கொண்டிருக்கும் புதிய இந்திய அணி

20 ஓவர் உலக கோப்பை முடிந்த பின்னர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கவிருக்கிறது. இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் அடுத்தபடியாக நியூசிலாந்து தொடரில் விளையாட உள்ளது.

அந்த தொடரில் அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அழித்துவிட்டு புதிய இந்திய அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அணி நிர்வாகம். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து தொடரில் பங்கேற்கவிருக்கும் 6 இந்திய வீரர்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் ஐயர்: ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ். இவர் நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

Iyer-Cinemapettai.jpg
Iyer-Cinemapettai.jpg

தீபக் சஹர்: சஹர் சமீப காலமாக இந்திய அணிக்காக அபாரமாக செயல்பட்டு வருகிறார். கடைசி ஓவர்களை சிறப்பாக வீசும் தீபக் சஹர், நியூசிலாந்து தொடரில் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Deepak-Cinemapettai.jpg
Deepak-Cinemapettai.jpg

ஹர்ஷல் பட்டேல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை பெற்றார். கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய பட்டேல், நியூசிலாந்து தொடரில் நிச்சயமாக பங்கேற்பார்.

Harshal-patel-Cinemapettai.jpg
Harshal-patel-Cinemapettai.jpg

ருத்ராஜ் கெய்க்வாட்: நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் 632 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற ருத்ராஜ், ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடிய போதிலும், நியூஸிலாந்து தொடரிலும் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ruturaj-Cinemapettai.jpg
Ruturaj-Cinemapettai.jpg

ஸ்ரேயாஸ் ஐயர்: இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பார்.

Shreyas-iyer-Cinemapettai.jpg
Shreyas-iyer-Cinemapettai.jpg

யுஸ்வேந்திர சாஹல்: 20 ஓவர்உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சாஹல் இடம்பெறவில்லை. இவரின் நீக்கம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து வரும் நியூசிலாந்து தொடரில் மீண்டும் சாஹல் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chahal-Cinemapettai.jpg
Chahal-Cinemapettai.jpg

Trending News