வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா.. பேசிய வாய்க்கலாம் பூட்டு போட்ட அண்ணாத்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த.

படம் வெளியான முதல்நாள் திரும்பிய பக்கமெல்லாம் படத்தைப் பற்றி எனக்கு விமர்சனங்கள் அளவுக்கு அதிகமாக இருந்தன. ஓபன் ஆக சொல்ல வேண்டுமென்றால் அனைவரும் ரஜினியை பயங்கரமாக தாக்கி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேசாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விடலாம் என்று கூறுமளவுக்கு விமர்சகர்கள் ரஜினியை வசைபாடினர்.

ஆனால் பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் பேராதரவை பெற்ற அண்ணாத்த திரைப்படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு பெண்களும் குழந்தைகளும் படையெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரஜினியின் அண்ணாத்த கொஞ்சம் சுமார்தான்.

சிறுத்தை சிவாவின் மற்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அண்ணாத்த படத்திற்கு ஏதோ ஓரவஞ்சனை செய்தது போல தான் படம் இருக்கிறது. முதல்நாள் விமர்சனத்தை பார்த்தபோது அவ்வளவுதான் முதல் நாளே இந்த படம் முடிந்துவிட்டது என்று நினைத்தார்கள்.

ஆனால் அந்த கதையில் நடித்து இருப்பது சூப்பர் ஸ்டார் அல்லவா. தான் ஏன் 40 வருடமாக உச்சத்தில் இருக்கிறேன் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். அண்ணாத்த படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் வெறும் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் செய்ததாகவும் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக ரஜினி மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கை கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News