புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வேட்டை மன்னன் படத்தை நிறுத்த காரணம் இதுதான்.. சிம்பு ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு நடிகர்களில் ஒருவராக வலம் வர வேண்டியவர் சிம்பு. ஆனால் தன்னுடையசோம்பேறித்தனத்தால் அந்த இடத்தை இழந்து தற்போது அதற்கு போராடிக் கொண்டிருக்கிறார். சிம்பு மட்டும் சரியாக படம் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து இந்நேரம் அவருக்கான இடம் வேறு ஒன்றாக இருந்திருக்கும்.

சிம்பு மாநாடு நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு திரையரங்கில் நடைபெற்றது. அதில் சிம்பு உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

அந்த மேடையில் மாநாடு படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சிம்பு தன்னுடைய பழைய பிரச்சினைகளை எல்லாம் பேசி மேடையில் கண்கலங்கியது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. பிரச்சனை நான் பார்த்துக்குறேன் என்ன நீங்க பாத்துக்கோங்க என்று சொன்னதெல்லாம் ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்து விட்டது.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் வசூலில் 100 கோடி சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. நெல்சன் ஏற்கனவே சிம்பு உடன் சேர்ந்து வேட்டை மன்னன் என்ற படத்தை உருவாக்கி வந்த நிலையில் இந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது.

அதற்கான காரணம் இவ்வளவு நாட்கள் அது தெரியாமல் இருந்த நிலையில் சிம்பு சமீபத்தில் அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை மன்னன் படம் ஆரம்பமாகும் போது வெளிவந்த படம் வேற லெவல் வெற்றி பெறும் என்பது எனக்கு தெரியும் ஆனால் இந்த நேரத்தில் இந்த படம் வந்தால் சரியாக இருக்காது என்பதற்காகவே அந்த படத்தை நிறுத்தி விட்டோம் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் டாக்டர் படத்தில் வேட்டை மன்னன் படத்தில் இருந்து காமெடிகள் 10 சதவிகிதம்கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை எனவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை இனிவரும் காலங்களில் அந்தப் படம் தொடங்கப்பட்டால் சிம்புவின் சினிமா மார்க்கெட்டுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News