புதன்கிழமை, நவம்பர் 20, 2024

ஆண்டவரை தவிர விஜய் டிவிக்கு வேற வழி இல்ல.. மகளுடன் சேர்ந்து தொகுத்து வழங்கும் கமல்

தற்போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி என்னவாகும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்தது.

கமல் உடல் நிலை சரியாகும் வரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் அல்லது விஜய் சேதுபதி இருவரில் ஒருவர் நடத்துவார்கள் என்ற வதந்தி பரவியது. பின்பு நடிகர் கமல்ஹாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்த படி நிகழ்ச்சியை நடத்துவார் என்ற செய்தியும் வெளியானது.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

ஸ்ருதி விஜய் டிவி மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நடிகர் கமல்ஹாசன் அவர்களும் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் போட்டியாளர்களுடன் உரையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தற்போது பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

மேலும் நடிகை ஸ்ருதி தன்னுடைய தந்தையின் உடல்நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை நன்றாக குணமடைந்து வருவதாகவும் விரைவில் ரசிகர்களுடன் உரையாடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்றே சென்ற வருடம் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். அவர் வெளிநாடு சென்ற காரணத்தால் அவருக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரின் முன்னாள் மருமகள் நடிகை சமந்தா தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News