புதன்கிழமை, நவம்பர் 20, 2024

அலப்பறை இல்லாமல் அரசியல் பேசிய சிம்பு.. வெங்கட்பிரபுவின் மாநாடு வெற்றியா தோல்வியா.?

சிம்புவின் படங்கள் என்றாலே பயங்கர ஆர்ப்பாட்டமாக இருக்கும். அடிதடி ஆரவாரங்கள் அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகள் என சும்மா பட்டைய கிளப்பி இருப்பார் சிம்பு. அதுமட்டுமல்லாமல் அவர் விரலை ஆட்டி ஆட்டி பேசும் வசனங்கள் தான் படத்தில் ஹைலைட். இவரை சிம்பு என அழைப்பதைவிட விரல் நடிகர் என அழைப்பதுதான் அதிகம்.

இப்படிப்பட்ட சிம்புவை மட்டுமே இத்தனை ஆண்டுகள் திரையில் பார்த்த ரசிகர்களுக்கு மாநாடு படம் நிச்சயம் வித்தியாசமாகவே இருக்கும். ஏனென்றால் படத்தில் சிம்பு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் அமைதியாக வந்து சென்றுள்ளார். டைம் மிஷின் வைத்து இதுவரை எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் டைம் லூப் அடிப்படையில் இரண்டாவதாக வந்துள்ள படம் தான் மாநாடு.

ஒரு கும்பல் தமிழக முதல்வரான எஸ்.ஏ.சந்திரசேகரை கட்சி மாநாடு ஒன்றின்போது கொலை செய்ய திட்டம் தீட்டுகிறது. அந்த நாள் மட்டும் நாயகனான சிம்புவின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் வந்து செல்கிறது. இதன் முடிவு என்ன என்பது தான் மாநாடு படத்தின் கதை. சிம்புவை வைத்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களை மட்டுமே வழங்கி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் வெங்கட் பிரபு சற்றே வித்தியாசமாக யோசித்துள்ளார்.

இதுவரை வெளியான வெங்கட் பிரபு படங்களில் மாநாடு படம் சற்று தனித்து தெரிகிறது என்று தான் கூற வேண்டும். அதுமட்டும் இன்றி வெங்கட் பிரபு படத்திற்காக தேர்வு செய்த கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பு. கல்யாணி ப்ரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் என அனைவருமே மிகவும் அற்புதமாக அவரவர் கதாபாத்திரங்களை செய்து கொடுத்துள்ளனர்.

படத்தின் பக்கபலமே இசை தான். அந்த விதத்தில் யுவன் மீண்டும் ஒரு மாயம் செய்துவிட்டார். இவரது இசையில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் அற்புதமாக உள்ளன. இதுதவிர ஒரு படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது அந்த படத்தின் எடிட்டர் தான். அந்த வகையில் எடிட்டர் பிரவீன் கே.எல் மிகவும் சிறப்பாக படத்தை எடிட் செய்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார்.

படம் டைம் லூப் கதையாக இருந்தாலும் சத்தமே இல்லாமல் படத்தில் கொஞ்சம் அரசியல் பேசியுள்ளார்கள். வெளிநாடுகளில் குண்டு வைத்தால் தீவிரவாதிகள் என்று சொல்கிறோம் அதுவோ இந்திய நிகழ்ந்தால் மட்டும் ஏன் முஸ்லிம் தீவிரவாதிகள் என கூறுகிறார்கள். தீவிரவாதிகளில் ஏது ஜாதி மதம் என்பதுபோல படத்தில் சில வசனங்கள் இடம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரசியல் பேசியுள்ள சிம்புவின் மாநாடு ரசிகர்களிடம் பாஸ் மார்க் பெற்று தேறிவிட்டது.

- Advertisement -spot_img

Trending News