சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் இல்லத்தரசிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் ல் இருந்து வருகின்றன.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கும் விஜய் டிவியில் வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் டிஆர்பி யில் கடும் போட்டி இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ள சீரியல் எது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் 11.6 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். தற்போது புதிய கண்ணம்மாவாக நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார்.
அதனால் ரசிகர்கள் பலரும் இனிமேல் நாங்கள் சீரியலை பார்க்க மாட்டோம் என்று கருத்து தெரிவித்தனர். இதனால் புதிய கண்ணம்மாவின் வருகைக்குப் பிறகு சீரியல் ரேட்டிங் குறையும் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் அதிக ரேட்டிங் பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்த வாரம் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியின் கடத்தல் மற்றும் பிரசவம் என்று பரபரப்பான காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாகவே இந்த சீரியல் டிஆர்பி யில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி விஜய் டிவியின் டிஆர்பியை எகிற செய்தது. அந்த வரிசையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலும் இடம் பிடித்துள்ளது.