ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்த படம் தேசிய விருது வாங்கிடனும்.. இயக்குனருக்கு கட்டளையிட்ட சிம்பு

நீண்ட நாட்களாக வெற்றி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி என்பது இதுதான் என காட்டியுள்ளது. அதன் விளைவு தற்போது சிம்புவுக்கு மளமளவென பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. சண்டைக்காரர்கள் எல்லாம் சமாதானமாக துடிக்கிறார்களாம்.

சிம்புவும் இந்த மாதிரி ஒரு வெற்றிப் படத்திற்கு தான் காத்துக் கொண்டிருந்தார். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருமே செம ஹேப்பி. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது மாநாடு.

பாலிவுட் சினிமாவில் மாநாடு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என பல நட்சத்திரங்கள் கோரிக்கை வைத்து அவர்களுக்காகவே தனி ஒரு ஷோ போட்டுள்ளனர் என்று சொன்னால் அது தமிழ் சினிமாவுக்கு பெருமை தானே. மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

அதற்கடுத்ததாக 3 தேசிய விருதுகள் வாங்கிய இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம்தான் சிம்புவுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுக்கும் என அடித்துச் சொல்கிறது கோலிவுட் வட்டாரம். அதற்காகவே ராமுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்கிறார்கள் சிம்புவின் நெருங்கிய வட்டாரங்கள்.

சிம்புவுக்கு இருக்கும் மாஸ்க்கு அவர் மாஸ் படங்கள் நடித்தாலே போதுமானது. ஆனால் தற்போது மாஸ் படங்களில் பெரிய அளவு ரசிகர்களிடம் ஈர்ப்பு இல்லை என்பதை தெரிந்துகொண்டு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு.

ராம் மற்றும் சிம்பு கூட்டணியில் ஒரு படம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆனால் எப்போது தொடங்கும் என்பதுதான் தெரியாமல் இருந்தது. ஆனால் கூடிய சீக்கிரத்தில் அதற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளன. ராம் தற்போது நிவின் பாலியை வைத்து ஒரு படம் எடுத்து வருவதாகவும் அந்த படம் முடிந்த உடனே சிம்பு படத்தை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Trending News