2021-ம் ஆண்டு அறிமுகமான 6 கதாநாயகிகள்.. அதுல ஒருத்தர் மட்டும் ராசி இல்லையாம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய நடிகைகள் அறிமுகமாகிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிகிறது. அந்தவகையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 6 புதுமுக நடிகைகள்.

மாளவிகா மோகன்: மாளவிகா மோகன் பெரும்பாலும் மலையாள படங்களிலே நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

நிதி அகர்வால்: நிதி அகர்வால், சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியானது. இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஆனால் இவர் நடித்த 2 படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, அதாவது ராசி இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ராஷ்மிகா மந்தனா: தெலுங்கில் ஹிட் அடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடித்துள்ளார்.

ராஜிஷா விஜயன்: மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ராஜிஷா விஜயன். தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் நடித்திருந்தார்.

துஷாரா விஜயன்: துஷாரா விஜயன் தமிழில் போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு குத்துச்சண்டை மையமாகக் கொண்டு ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயனின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து.

பிரியங்கா அருள்மோகன்: டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் தற்போது இளைஞர்களின் கனவுநாயகியாக உள்ளார்.