நம் சினிமாவில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளி வருகிறது என்றால் அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். மேலும் சில அரசியல் கட்சிகள் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவர முடியாத படி செய்த சில சம்பவங்களும் நடந்துள்ளது.
அப்படி ஒரு முறை சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் வெளி வரக்கூடாது என்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சனை செய்தார். அப்போது அவரது தொண்டர்கள் ரஜினிகாந்த் பட பெட்டியை எடுத்து சென்றனர். இதற்கு சூப்பர் ஸ்டார் பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விட்டார்.
அதேபோன்று நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் விருமாண்டி. அந்தப் படத்திற்கு முதலில் சண்டியர் என்ற தலைப்பில் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் சாதியை பற்றி பேசுவதாக அந்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது.
அதன் பிறகு பல போராட்டங்களுக்கு பின் கமல்ஹாசன் அப்போது பதவியில் இருந்த ஜெயலலிதாவுக்கு பயந்து சண்டியர் என்ற படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றினார். அதை தொடர்ந்து இவர்களின் வரிசையில் நடிகர் விஜய்யும் இணைந்தார்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் தலைவா. ஆனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு அப்போது கட்சியில் இருந்த எடிஎம்கே பிரச்சனை செய்தது. அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பின்னர் வெளியானது.
இந்த நடிகர்கள் அனைவரும் அரசை எதிர்த்து பேசினால் தங்கள் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை வருமோ என்று பயந்தார்கள். ஆனால் இதில் விதிவிலக்கானவர் நடிகர் அஜித் மட்டும் தான்.
ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் திரைப்பட நடிகர்கள் விஜய், சூர்யா, ரஜினிகாந்த், சரத்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அஜித் சில அரசியல் கட்சிகள் நடிகர்களை கட்டாய படுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு கலைஞர் ஒரு தீர்வு தர வேண்டும் என்று மேடையில் தைரியமாக பேசினார். அவரின் இந்த துணிச்சலான பேச்சுக்கு சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டினார். இதை பல நடிகர்களும் வரவேற்றனர். யாருக்கும் இல்லாத துணிச்சல் அஜித்குமாருக்கு இருந்ததை பார்த்து திரையுலகினர் பலரும் வியந்து பார்த்தனர். இந்த நிகழ்வு அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அஜித்தின் தைரியத்துக்கு இது ஒரு சான்றாகும்.