
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருபவர் தான் அந்த நடிகை. வயது அதிகமானாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் விஜய், அஜித், கமல், விக்ரம் என அனைத்து டாப் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மட்டும் இந்த நடிகை நடிக்கவே இல்லை. அது ஒரு குறையாகவே இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியுடனும் நடித்தார். ஆனால் அது மிக சிறிய கதாபாத்திரம் தான். அதன் மூலம் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இருப்பினும் சோலோ நாயகியாக நான் நடித்து டாப் நடிகையாக வருகிறேன் என்று கூறி அடுத்தடுத்து படங்களில் நடித்தார். அந்த படங்களும் பிளாப் ஆனதால் தற்போது நடிகை கைவசம் ஒருசில படங்கள் மட்டுமே வைத்துள்ளார். என்னதான் நடிகைக்கு வயதானாலும் பார்ப்பதற்கு இளமையாகவே இருப்பார்.
அதன் காரணமாக நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன் என கூறுகிறாராம். சமீபத்தில் ஒரு படக்குழுவினர் நடிகையிடம் சென்று இரண்டாவது நாயகியாக நடிக்க அழைத்தார்களாம். ஆனால், நடிகையோ நடித்தால் கதாநாயகி மட்டும் தான், இரண்டாவது நாயகி, கௌரவ தோற்றம் ஆகிய வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக 20 வருடங்களை முடித்து சமீபத்தில் தனது திரைப்பயணத்தை கொண்டாடிய அந்த நடிகை இன்றும் நடித்தால் ஹீரோயின் தான் என கூறி வருவது அவருக்கு தான் பிரச்சனை. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் அவருக்கு நல்லது என சிலர் அறிவுரை கூறி வருகிறார்கள்.