வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வசூலில் பாகுபலியை மிஞ்சப் போகும் ஆர்ஆர்ஆர்.. ராஜமௌலி முன் மேடையில் போட்டு உடைத்த பிரபலம்

இன்றைய காலக்கட்டத்தில் பழமொழியில் படங்கள் வெளியாகி வருகின்றன, இந்த வரிசையில் தற்போது ஆர்ஆர்ஆர் படமும் இடம் பிடித்துள்ளது. மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும் என்டிஆர் உட்பட இந்திய பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

இப்படத்தில் பல ஆக்ரோஷமான வசனங்களும் சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒரு பான் இந்தியா படம், அதாவது தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டு படத்தினை பிரமோஷன் செய்து வருகின்றனர். இதற்காக அந்தந்த மாநில நடிகர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து படத்தினைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

சென்னையில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அழைத்தனர். விழாவில் கலந்து கொண்ட இருவரும் படத்தினை பற்றி தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறி வந்தனர்.

அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பாகுபலியின் அனைத்து சாதனைகளையும் ஆர்ஆர்ஆர் படம் முறியடிக்கும் என தெரிவித்தார். மேலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பினை சிறப்பாக நடித்துள்ளதாகவும் இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் கூறினார். தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார் உதயநிதி. சென்னை சிட்டியில் பிரபல தியேட்டரில் 6 ஸ்கிரீனில் 5 ஸ்கிரீன் ஆர்ஆர்ஆர் படம் ஓடும் என்று உறுதி அளித்துள்ளார் உதயநிதி.

Trending News