வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆர்ஆர்ஆர் படத்தை புகழ்ந்த சிவகார்த்திகேயன்.. இந்த ரகசியம் செல்லுபடியாகுமா

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் தான் ஆர்ஆர்ஆர். தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வரும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இப்படம் ஒரு பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி படு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “ராஜமெளலி இயக்கிய மகதீரா படம் பார்த்ததிலிருந்து மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். பின்னர் ஈ படம் பார்த்து பிரமித்து போனேன். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இவர்கள் இரண்டு பேரை புலி அல்லது சிங்கம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு திரையில் தெரிகிறார்கள்.

இவர்கள் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். சுதந்திரம் வாங்க நிறைய பேர் இரத்தம் சிந்தினார்கள். அந்தளவிற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தில் உள்ளவர்கள் இரத்தம் சிந்தி உழைத்து இருக்கிறார்கள். நாம் அனைவரும் தியேட்டரில் படத்தை பார்ப்பது தான், அவர்களுக்கு நாம் தரும் மரியாதை. நான் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து விடுவேன்” என கூறினார்.

அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகையும் சிவகார்த்திகேயன் மிகவும் புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள பைலிங்குவல் படத்தில் நடிக்க உள்ளார். இது அவரின் முதல் தெலுங்கு படம் என்பதால் தெலுங்கு ரசிகர்களின் ஆதரவை பெறவே இப்படி பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் படம் தெலுங்கில் வெளியாகும் போது இதேபோல் அவர்களும் இவரை புகழ்ந்து பேச வேண்டும் அல்லவா. அதனால் தான் மனுஷன் தற்போது புகழாரம் சூட்டி இருப்பதாக கூறி வருகிறார்கள். சினிமால இதெல்லாம் சகஜமப்பா

Trending News