
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. சமீப காலமாக இவரது நடிப்பில் எந்த படங்களும் வெளிவராமல் இருந்தாலும் ரசிகர்களின் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கு காரணம் இவரது நடிப்பில் வெளியான படங்களின் வெற்றி என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
திரிஷா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் இடம்பெற்ற பேசலாமே என்ற வசனம் தான் படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த அளவிற்கு இவரது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு திரிஷா இல்லாத படங்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் திரிஷா நடிப்பில் உருவான படங்கள் மட்டும்தான் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.

திரிஷா திரைத் துறையில் நுழைந்து 19 வருடங்கள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் திரிஷா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும்இப்புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது திரிஷாவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் கூறினர்.

தற்போது திரிஷாவிற்கு 38 வயதாகிறது. ஆனால் இளமை மாறாமல் தற்போது வரை தனது அழகினை பேணிக்காத்து வருகிறார். தற்போது திரிஷா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சேலையுடன் கண்ணாடி போட்டபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரிஷா என்ன செய்தாலும் அழகாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். புதிய கெட்டப்பில் வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.