வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சரக்கு விளம்பரத்தில் ஆர்வம் காட்டும் நடிகைகள்.. பணத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க

சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் திரைப்படங்களில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா போன்றோரும் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் தற்போது ராய் லக்ஷ்மி, பூஜா ஹெக்டே, ஹன்சிகா மோட்வானி, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்கின்றனர்.

raai laxmi
raai laxmi

அதாவது வெளிநாட்டு கம்பெனிகளின் மதுபான வகைகளை ரசிகர்களிடம் அவர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.அப்படி அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் அந்த மதுபானத்தை எப்படி குடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். இதை எந்த வயதில் இருப்பவர்கள் அருந்த வேண்டும் என்றும் விளக்கம் கொடுக்கின்றனர்.

மேலும் இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மிகவும் நல்லது என்றெல்லாம் தங்கள் சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் அந்த மதுபான வகைகள் அனைத்தும் இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை.

kajalagarwal
kajalagarwal

அதைப்பற்றி தெரிந்து இருந்தும் கூட இந்த நடிகைகள் பணத்துக்காக இப்படி ஒரு விளம்பரத்தை செய்து வருகின்றனர். இந்த நடிகைகளுக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கிடைக்கும் சம்பளத்தை விட இது போன்று விளம்பரம் செய்வதால் ஏராளமான பணம் கிடைக்கின்றது.

இதனால் லட்ச, லட்சமாக பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நடிகைகள், தங்கள் ரசிகர்களிடம் இந்த மதுபான வகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அவர்களின் இந்த விளம்பரத்தை சோசியல் மீடியாவில் பார்த்த பலரும் அவர்களை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.

இருந்தாலும் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Hansika
Hansika

 

 

Trending News