வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இணையத்தில் ட்ரெண்டாகும் டாப் 15 சீரியல் நடிகர்கள் லிஸ்ட்.. முதலிடம் பிடித்த அமுல் பேபி!

சின்னத்திரை ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தற்போது இணையத்தில் டாப் சீரியல் கதாநாயகர்களின் லிஸ்ட் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் ரசிகைகளின் பிடித்தமான கதாநாயகன் வரிசையில் முதலிடத்தை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலின் கதாநாயகன் விஷ்ணு விஜய் பிடித்துள்ளார். இந்த சீரியலில் அமுல் பேபி என்று செல்லமாக அழைக்கப்படும் விஷ்ணு விஷால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் கச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இரண்டாமிடத்தை ரொமான்டிக் ஹீரோவாக சன் டிவியின் ரோஜா சீரியலில் வலம்வரும் சிப்பு சூர்யன் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மூன்றாம் இடம் ஜீ தமிழில் அன்பே சிவம் சீரியலின் கதாநாயகன் விக்ரம் ஸ்ரீக்கு கிடைத்துள்ளது. அதைப்போல் நான்காமிடம் செம்பருத்தி சீரியலின் கதாநாயகன் விஜே அக்னிக்கும், ஐந்தாமிடம் சின்னத்திரையில் கதாநாயகனாக பல ஆண்டுகளாகத் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொண்ட ஸ்ரீ குமாருக்கு கிடைத்துள்ளது.

இவர் சமீபத்தில் சன்டிவியின் வானத்தைப்போல என்ற சீரியலில் புதிதாக என்ட்ரி ஆகி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். மேலும் ஆறாம் இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற விருவிருப்பான சீரியலின் கதாநாயகன் நந்தாவிற்கு கிடைத்துள்ளது. அத்துடன் 7-வது இடம் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த மிர்ச்சி செந்தில் பெற்றுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

8-வது இடம் ராஜா ராணி சீரியலின் கதாநாயகன் சிந்துக்கு கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் தன்னுடன் நடித்த சீரியல் கதாநாயகி ஸ்ரேயா அஞ்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 9-வது இடம் சன்டிவியின் சித்தி2 சீரியல் கதாநாயகன் நந்தன் லோகநாதனுக்கும், 10-வது இடம் கயல் சீரியலின் கதாநாயகன் சஞ்சீவிக்கு கிடைத்துள்ளது. 11-வது இடம் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் காதல் மன்னன் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு கிடைத்துள்ளது. மேலும் 12வது இடம் சன்டிவியின் அன்பே வா சீரியல் கதாநாயகன் விராட் பெற்றுள்ளார்.

13-வது இடம் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண் பிரசாத் பெற்றுள்ளார். மேலும் 14-வது இடம் சன் டிவியின் பூவேஉனக்காக சீரியலின் கதாநாயகன் ஆஸிமும், 15-வது இடம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன்பிறகு தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகர் தீபக்கிற்கு கிடைத்துள்ளது.

16-வது இடம் சன்டிவி கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகன் ராகுல் ரவிக்கும், 17-வது இடம் விஜய் டிவியில் மௌனராகம் சீரியல் கதாநாயகன் சல்மான் பெற்றுள்ளார். 18-வது இடம் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் கதாநாயகன் புவியரசனுக்கும், 19-வது இடம் ஜீ தமிழ் நினைத்தாலே இனிக்கும் சீரியல் கதாநாயகன் ஆனந்த் செல்வம் பெற்றுள்ளார். இவ்வாறு இணையத்தில் வெளியாகியுள்ள டாப் சீரியல் நடிகர்களின் பட்டியல் தற்போது சின்னத்திரை ரசிகர்களால் வைரலாகி கொண்டிருக்கிறது.

Trending News