சிம்புவை நம்ப தயங்கும் தயாரிப்பாளர்கள்! காரணம் இதுதானாம்? கொஞ்ச நஞ்ச வேலையா பண்ணி வச்சிருக்காரு

இந்த ஹீரோவை வைத்து படம் பண்ணா செமையா ஓடும் நல்ல வசூல் கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்தால் தான் அந்த ஹீரோவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் அந்த ஹீரோவும் படத்தில் நடித்து கொடுத்ததோடு தன் கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல், படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் புரமோஷன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இப்படி செய்தால் கூட தமிழில் சர்ச்சை நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வரவில்லையாம். கோலிவுட்டை பொருத்தவரை சிம்பு சிக்காத சர்ச்சைகளே கிடையாது. அதேபோல் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் காலம் கடத்துவது என இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இருப்பினும் சமீபத்தில் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் இல்லையாம்.

காரணம் மாநாடு படம் அவ்வளவு ஈஸியாக வெளியாகவில்லை. பல போராட்டங்களுக்கு பின்னர் தான் படம் வெளியானது. அதிலும் வெளியாவதற்கு முதல் இரவு பணப்பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சிம்பு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு நமக்கென்ன என்பது போல் இருந்து விட்டாராம்.

ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்றதும் என்னால் தான் படம் வெற்றி பெற்றது என கூறி தற்போது அவரின் சம்பளத்தை உயர்த்தி உள்ளார். எனவே தமிழ் தயாரிப்பாளர்கள் அவரை நம்ப தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் சிம்பு இன்னும் சில படங்களில் நடிக்கட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதுபோல் கூறுகிறார்களாம்.

அதாவது சிம்புவை விட்டு பிடிக்கலாம் என கணக்கு போட்டுள்ளார்களாம். ஆனால் அவருக்கு இனி ஏறுமுகம்தான் என்பதால் தயாரிப்பாளர்கள் சோதிப்பது அவ்வளவு சரியல்ல என்பது போன்ற கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.