ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விரேந்திர சேவாக்கின் மறக்க முடியாத 5 வரலாற்று சாதனைகள்.. முல்தான் இன் சுல்தான்

இந்திய அணியில் பயம் அறியாத ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது வீரேந்திர சேவாக். கிளன் மெக்ராத், சோயப் அக்தர், பிரட் லீ, வாசிம் அக்ரம் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களையும், ஷேன் வார்னே, ஷாக்குளைன் முஷ்டாக் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களையும் அலறவிட்ட ஒரு அதிரடி ஆட்டக்காரர்.

டெஸ்ட் போட்டிகளையே, 20 ஓவர் போட்டி போன்று ஆடக்கூடிய ஒரு விசித்திரமான விளையாட்டு வீரர். இவரைப் பார்த்தே டெஸ்ட் போட்டிகளையும் பார்க்க ஆரம்பித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தவகையில் விரேந்திர சேவாக் நிகழ்த்திய 5 பிரம்மாண்ட சாதனைகள்.

முல்தான் இன் சுல்தான்: இவர் மூன்று முறை டெஸ்ட் போட்டியில் முச்சதம் கண்ட வீரர். இந்த வரலாற்று சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இவர் பாகிஸ்தான் அணியுடன் இருமுறையும், சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் ஒருமுறையும் முச்சதம் அடித்துள்ளார்.

410 ரன்கள் பார்ட்னர்ஷிப்: விரேந்திர சேவாக் மற்றும் இந்திய அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து 410 ரன்கள், முதலாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இந்த சாதனையை இதுவரை எவரும் நிகழ்த்தியது இல்லை.

329 இல் 201: இலங்கைக்கு எதிராக ஹல்லியில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று இந்திய அணிக்காக 201 ரன்கள் குவித்தார் விரேந்திர சேவாக்.

அதிவேக சதம்: முகமது அசாருதீன் 62 பந்துகளில் அடித்த சதம் தான் முதலில் இந்திய அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்தது. அதன் பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சேவாக் இந்திய அணிக்காக 60 பந்துகளில் சதம் அடித்து, அதை முந்தினார். அவருக்கு பின் இந்திய அணியின் ரன் மெஷின், விராட் கோலி 52 பந்துகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்துள்ளார்.

26 ரன்கள்: 2006ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில், டில்ஹார பெர்னாண்டோ ஓவரில் 26 ரன்கள் அடித்தார் சேவாக். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இவர் பெர்னாண்டோவின் ஒரே ஓவரில்(4,4,6,4,4,4) அடித்துள்ளார்.

Trending News