ஒரே ஆங்கரை வைத்து 1055 எபிசோடுகள் ஓட்டிய சன் டிவி.. இப்பவும் அந்த குரலை கேட்டுட்டே இருக்கலாம்

ஒரு திரைப்படத்தை 3 மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பதற்கு படத்தின் திரைக்கதையும், சுவாரஸ்யமும் மிக முக்கியம். அவ்வாறு திரையரங்குகளுக்கு போவதற்கு முன்பு இந்தப் படத்திற்கு போகலாமா என பல கேள்விகள் நம்முள் எழும். ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்துடன் நமது மூன்று மணி நேரத்தை செலவிட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கும்.

நம்முடைய அனைத்து கேள்விக்கும் பதிலாக வந்த நிகழ்ச்சி தான் டாப் 10 மூவிஸ். உலகில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் வழிகாட்டியாக சன் டிவியில் டாப் 10 மூவிஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை செய்தி தொகுப்பாளர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அந்த வாரம் வெளியான திரைப்படங்களில் சிறந்த பத்து படங்களின் கதை, நடிப்பு அடிப்படையில் தரவரிசை கொடுக்கப்படும். டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியில் சுரேஷ்குமார், படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்குகளில் இருந்து வெளியே வருவதைப் போலவே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். மிக சுருக்கமாக படத்தின் கதையை தெளிவாக சொல்லுவார்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி 90 கிட்ஸ் இன் ஃபேவரட் நிகழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பின்னர் தான் திரைப்படத்தைப் பார்ப்பதா, இல்லையா என்பதை ரசிகர்கள் முடிவு செய்வார்கள். அந்தளவுக்கு இந்நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 19 ஆண்டுகளாக 1055 எபிசோடுகள் ஒரே பெயரில், ஞாயிறு தோறும் ஒரே நேரத்தில், ஒரே தொகுப்பாளராக வைத்து வெற்றிகரமாக ஓடிய ஒரே நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளது. ஆனால் தற்போது டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்வதில்லை.

தற்போது கையில் இருக்கும் மொபைல் மூலமாகவே படத்தின் கதையை தெரிந்து கொண்டு பிடித்திருந்தால் மட்டுமே இப்படத்திற்கு செல்கிறார்கள். தற்போது இணையத்தில் பல விமர்சகர்கள் உருவாக்கி உள்ளார்கள். இதனால் இணையத்தில் வெளியாகும் விமர்சனங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.