ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

களமிறங்க காத்திருக்கும் மும்மூர்த்திகள்.. எதிரணியினர் இனி டரியல் தான்.

இந்திய அணிக்கு, இந்த தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் படுமோசமாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது ஒருநாள் போட்டித் தொடரிலும் கோட்டை விட்டது இந்திய அணி.

இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோத உள்ளது. அந்த அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகள் என விளையாட உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இதற்கான இந்திய அணியில் பல மாறுதல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியில் காயம் காரணமாக விலகி இருந்த மூன்று நட்சத்திர வீரர்களும் அணியில் இடம் பெற உள்ளனர்.

1. ரோகித் சர்மா: தென்னாப்பிரிக்கா தொடரை காயம் காரணமாக மிஸ் செய்த ரோஹித் சர்மா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக களம் காண உள்ளார்.

2. ரவீந்திர ஜடேஜா: நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறுவை சிகிச்சையிலிருந்து பூரண குணம் அடைந்து விட்டார். அவர் தனது திறமையை நிரூபிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார்.

3. ஹார்திக் பாண்டியா: பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. இவர் தனது முழு உடற் தகுதியை நிரூபித்து அணியில் விளையாட காத்துக்கொண்டிருக்கிறார்.

Trending News