ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

இறங்கி வேலை செய்யும் சிவகார்த்திகேயன்.. இனிமேலும் திண்டாட முடியாதுப்பா!

சினிமாவில் மிக வேகமாக ஒரு உயரத்தை அடைந்த மிகச் சில நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவருடைய படத்திற்கு குழந்தைகள் முதல் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பல திறமைகளைக் கொண்டு கலக்கி வருகிறார்.

முன்னணி நடிகராக பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக பல கடன் சிக்கல்களில் சிக்கி தவித்து வருகிறார். அதிலும் அவர் பெரிதும் எதிர்பார்த்த ரெமோ திரைப்படத்தின் படு தோல்வியால் பல கோடி கடனுக்கு ஆளானார்.

அதைத் தொடர்ந்து தற்போது டாக்டர் பட பைனான்சியருக்காக பல இடங்களில் கையெழுத்து போட்டு அங்கும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவகார்த்திகேயன் எப்படியாவது இந்த கடனிலிருந்து மீண்டு விட வேண்டும் என்பதற்காக பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்துத்தர சம்மதித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஈசிஆர் பக்கத்தில் வீடு கட்டி வசித்து வரும் அவருக்கு போயஸ்கார்டனில் சொந்தமாக ஒரு ஆபீஸ் இருக்கிறது. தற்போது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் சிவகார்த்திகேயன் அதிகபட்ச நேரத்தை அந்த ஆபிஸில்தான் செலவிடுகிறாராம்.

அவர் வீட்டில் இருந்து போயஸ் கார்டனுக்கு வருவதற்கே பல நேரம் பிடிக்கும். இருந்தும் அவர் காலையிலேயே ஆபீசுக்கு வந்து உட்கார்ந்து விடுகிறாராம். அதோடு இல்லாமல் கணக்கு வழக்கு பார்ப்பது போன்று அங்கு இருக்கும் எல்லா வேலைகளையும் அவர்தான் கவனிக்கிறாராம்.

மேலும் படத்தில் நடிப்பது தொடர்பாக கதை கேட்பது போன்ற அனைத்து வேலைகளையும் அவர் அங்குதான் செய்து வருகிறார். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் தான் அவர் இவ்வளவு நஷ்டத்தில் இருக்கிறார். இதை மனதில் வைத்தே அவர் இனி அடுத்தவரை நம்பி பயனில்லை நாமே இறங்கிட வேண்டியது தான் என்று ஒரு முடிவுடன் இருக்கிறார்.

Trending News