ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

கமல்ஹாசனை வெறுத்து ஒதுக்கும் நயன்தாரா.. ஆஹா! கடைசியில் வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தான் தற்போது வரை நயன்தாரா நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா இதுவரைக்கும் ரஜினிகாந்த், விஜய் அஜித் உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் கமல்ஹாசனுடன் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை, அதற்கு என்ன காரணம் என்பது தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளை பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்துள்ளன. அப்போது ஆரம்பித்த அபிராமி முதல் தற்போது இருக்கும் ஆண்ட்ரியா வரை ஏகப்பட்ட நடிகைகள் உட்பட கிசுகிசுக்கள் வந்துள்ளன. அப்போது இருந்த பிரபல நடிகைகள் நயன்தாராவிடம் தாங்கள் கமல்ஹாசன் கிசுகிசுவில் சிக்கியதாகவும் அதனால்தான் தங்களுக்கு பெரிய அளவில் அதன்பிறகு பட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும் கமலஹாசனுடன் இணைந்து நடித்தால் அதன்பிறகு தாங்கள் எது செய்தாலும் எந்த படத்தில் நடித்தாலும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வரும் இதனால் தங்களுடைய சினிமா கேரியர் தொலைந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்ட நயன்தாரா அவர்களிடம் இனிமேல் கமலஹாசனுடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு சிலர் நயன்தாராவிற்கு கமலஹாசன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இல்லையென்றால் கண்டிப்பாக கமல்ஹாசனுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்திலாவது நடித்து இருப்பார் என கூறிவருகின்றனர்.

ஆனால் கமல்ஹாசன் ரசிகர்கள் நயன்தாரா ஒன்றும் சளைத்தவர் இல்லை கமல்ஹாசனுக்கு எப்படி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்ததோ அதை விடவே நயன்தாரா ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சிக்கியுள்ளார். கிசுகிசுக்கள் தாண்டி காதல் வலையில் சிக்கியது பலருக்கு தெரியும் அப்படி இருக்கும்போது நயன்தாரா கமல்ஹாசன் குறை சொல்வது ஒன்றும் நாயம் இல்லை எனக் கூறி வருகின்றனர். மேடம் ஃபர்ஸ்ட் நீங்க கரெக்டா இருங்க அப்புறம் எல்லாரையும் சொல்லுங்க

- Advertisement -spot_img

Trending News