சினிமா செய்திகள்

ரஜினி, நெல்சன் கூட்டணிக்கு கதை, ஹீரோயின் ரெடி.. அடடா! அந்தப்படத்தின் தழுவலா

By Vijay · 06 மார்ச் 2022
rajinikanth nelson dilipkumar

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி அடுத்ததாக இணைய போகின்ற இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள். நெல்சன் திலீப்குமார் தளபதியின் பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட பணியில் பிஸியாக இருக்கிறார். இந்த பீஸ்ட் படம் வெளியான பிறகு ரஜினியின் அடுத்த படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் நெல்சன் திலீப்குமார் கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறாராம். ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்து தயாராக இருந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் ஒரு ஐந்து மாதங்களாவது எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இணையும் இந்த திரைப்படம் நிச்சயமாக மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம். படத்தின் வேலைகள் படுஜோராக நடைபெற்று வருவதாக அவ்வப்போது இணையத்தில் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகியாக மிகப்பெரிய ஒரு நடிகையைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

ரஜினிகாந்த் எனும் ஒரு பிரம்மாண்டத்திற்கு நிகரான ஒரு நடிகை உலக அழகி ஐஸ்வர்யா ராய் மட்டுமே. உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பது 90% உறுதியாகிவிட்டது. இந்த படம் எப்படி இருக்கப்போகிறது ரஜினிகாந்த் அவர்கள் என்ன மாதிரியான கெட்டப்களில் வந்து அசத்தப் போகிறார் என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் வெளியான சீனிகம் திரைப்படத்தை தழுவிய கதையாக இந்த கதை இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது . அந்த படம் இந்தியில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி ரஜினிக்கு மிகவும் இன்ஸ்பயர் ஆன படமாக இந்த படம் இருக்கிறது. எனவே இந்த படத்தை தழுவி நமது புதிய படத்தின் கதையை எடுங்க நெல்சன் என்று நெலசனிடம் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்ப்ரைசாக இந்த படம் அமையும் என்று நெல்சன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.