புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எல்லை மீறிய ஸ்ருதிஹாசன்.. கடும் கோபத்தில் கமலுக்கு போன் போட்ட ரஜினி

தற்போது ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக மாறி இருப்பவர் நடிகர் தனுஷ். தன்னுடைய மனைவியை பிரிவதாக அவர் அறிவித்த பிறகு எங்கு திரும்பினாலும் இவரை பற்றிய செய்திகள் தான் மீடியாவில் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் இவரை பற்றிய ஒரு புதிய தகவலை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர் சமீப காலமாக சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகளின் பல அந்தரங்க விஷயங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் கூறும் அந்த விஷயங்கள் எல்லாம் உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனாலும் அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு சிலர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து 3 என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருந்தார். அதுதான் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் அந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் இருவருக்கும் ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகள் இருந்தது, அதையும் தாண்டி படுக்கையறை காட்சிகளும் அதில் வைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரு மனைவியே, கணவனை வைத்து இவ்வளவு நெருக்கமான காட்சிகளை எடுத்திருக்கிறரே என்று அனைவரும் வியப்பில் இருந்தனர். அந்த நெருக்கமான காட்சிகளால் ஸ்ருதி, தனுஷுக்கு இடையே நிஜத்தில் கெமிஸ்ட்ரி பற்றிக் கொண்டது.

இதனால் ஸ்ருதி, தனுஷை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு ரொம்பவும் வெறியுடன் இருந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ஐஸ்வர்யா தன் தந்தை ரஜினியிடம் சென்று இந்த விஷயத்தை கூறி இருக்கிறார். மேலும் ஸ்ருதியின் அப்பா கமலிடம் இதைப் பற்றிக் கூறுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உடனே அவரும் கடும் கோபத்தில் கமலுக்கு போன் செய்து இந்த விவரத்தை பற்றி கூறியிருக்கிறார். அதைக் கேட்ட கமல் தன் மகள் ஸ்ருதியை இந்த விஷயத்தில் தலையிடாமல் கண்டித்து வைத்திருக்கிறார். பிறகுதான் சுருதி தனுஷை விட்டு விலகி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்போது பிரிந்த அவர்கள் இருவரும் தற்போது வரை எந்த திரைப்படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Trending News