திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காதலால் தனிமரமாக நிற்கும் சிம்பு.. பழி வாங்கினாரா நயன்தாரா?

சில வருடங்களுக்கு முன்பு கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் சிம்பு, நயன்தாரா ஜோடி. வல்லவன் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். அந்த படத்தில் இவர்களின் நெருக்கமான காட்சிகளை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அதன் பிறகுதான் அவர்களின் காதல் விஷயம் மெல்ல மெல்ல ஊடகங்களில் கசிய தொடங்கியது. சிம்பு, நயன்தாராவை உருகி உருகி காதலித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ நயன்தாரா, சிம்புவை பிரிந்துவிட்டார். ஆனால் சிம்புவால் நயன்தாராவை விட்டு விலக முடியவில்லை.

இதனால் அப்போது சினிமா பிரபலத்தின் மேனேஜர் ஒருவரிடம் நயன்தாரா என்னிடம் பேச மாட்டேங்கிறீங்க, அவங்களை என்னிடம் பேச சொல்லுங்க என்று கூறியிருக்கிறார். மேலும் நான் போன் செய்தால் நீ சைக்கோ என்று திட்டி போனை வைத்து விடுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் நயன்தாரா சிம்புவை வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். இதுதவிர நயன்தாராதான் சிம்புவுடனான காதல் முறிவு குறித்து முதன் முதலில் பத்திரிக்கைகளில் வாய் திறந்தார். அவர்களின் பிரிவுக்கு சிம்பு தான் காரணம் என்று பல செய்திகளும் வெளிவந்தது.

ஆனால் உண்மையில் சிம்பு தான் நயன்தாராவை மறக்க முடியாமல் தவித்திருக்கிறார். அதனால்தான் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மேலும் சிம்பு வெளியூர்களுக்கு பயணம் செல்வது, தனிமையில் நேரத்தை கழிப்பது என்று நயன்தாராவை மறக்க முயற்சி செய்திருக்கிறார்.

அதோடு சிம்பு தன்னுடைய படங்களில் நயன்தாரா சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு காட்சியை வைப்பது, நயன்தாரா நம்பர் வைத்த சீட்டில் உட்காருவது கவலைப்படுவது என்று வேதனைபட்டு வருகிறார். ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் ஊர் சுற்றுவது, பர்த்டே கொண்டாடுவது என்று ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒருமுறை நயன்தாரா சிம்புவை பார்த்து உனக்கு நெருக்கமான ஒருவரை காதலித்து உன்னைப் பழி வாங்குவேன் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னபடியே சிம்புவுக்கு ஆரம்பத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருகிறார். அவரை வைத்துதான் நயன்தாரா சிம்புவை பழிவாங்கி வருகிறார்.

இதையெல்லாம் கடந்து சிம்பு நடிகை ஹன்சிகாவை காதலித்தார். ஆனால் அந்த காதல் ஆரம்பித்து முடிந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்ற வசனம் நிச்சயம் சிம்புவுக்கு பொருந்தும். ஒருவகையில் சிம்பு இன்று திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமே இந்த பெண்கள் தான்.

Trending News