பீஸ்ட் படம் இந்த படத்தின் இன்ஸ்பிரேஷன்.. உண்மையை போட்டு உடைத்த நெல்சன்

விஜய்யின் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் வேலை செய்த அனுபவங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் வீரராகவன் கதாபாத்திரத்தில் பொதுமக்களை ஹைஜாக் செய்த தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே இந்த படத்தில் முதன் முதலில் கதையை கேட்டு விஜய் படப்பிடிப்புக்கு வந்தாராம். அப்போது நெல்சன் திலீப் குமாரின் படக்குழுவினரை பார்த்து உங்கள் டீம் மிகவும் வித்தியாசமாக உள்ளது என விஜய் தெரிவித்தாராம்.

அதன் பின்னர் விஜய்யும் அந்த பட குழுவோடு சேர்ந்து பீஸ்ட் படத்தை நடித்து முடித்துள்ளாராம். பொதுவாகவே நடிகர் விஜய் படம் என்றால் இன்றோடக்ஷன் பாடல் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். ஆனால் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு என எந்த ஒரு இன்றோடக்ஷன் பாடலும் இடம் பெறவில்லை, இதனை நடிகர் விஜய்யும் ஏற்றுக்கொண்டார் என்று நெல்சன் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தை 60 சதவிகிதம் ஆக்ஷனிலும் 40% காமெடியிலும் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் கூர்கா திரைப்படத்தின் காட்சிகள் எதுவும் இத்திரைப்படத்தில் அமைந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி நடிகர் விஜய், அசின் உள்ளிட்டோர் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான போக்கிரி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சில காட்சிகள் பீஸ்ட் படத்தில் இருக்கும் என்றும் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக லிஃப்டில் அசினும் விஜய்யும் மாட்டிக் கொள்ளும் காட்சி போலதான் இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே லிஃப்டில் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் அமைந்திருக்கும் என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர். மேலும் பீஸ்ட் படத்தின் பஞ்ச் டயலாக்குகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டி இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் 3 பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் நிலையில், மீதம் உள்ள இரண்டு பாடல்கள் இப்படத்தின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் என்றும் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் அனிருத் இசையில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →