சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரால் வருத்தத்தில் இருக்கும் நெல்சன்.. அடுத்து நடக்கப் போகும் டுவிஸ்ட்

By Vijay · 17 ஏப் 2022
rajinikanth nelson dilipkumar

டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் சுமார் ரகம் என்று கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களே இப்படத்தை அவருக்காக ஒரு தடவை பார்க்கலாம் என்று கூறி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறது. தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி இயக்குனர் நெல்சனுக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்சன் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதனடிப்படையில் சூப்பர் ஸ்டார் பீஸ்ட் திரைப்படத்தை காண ஆவலுடன் வந்திருக்கின்றார்.

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக ரஜினிகாந்த் படம் முடிந்த பிறகு சிரித்தபடியே வணக்கம் வைத்து வெளியே சென்றிருக்கிறார். மேலும் நெல்சன் பார்த்து படம் நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுடைய கடின உழைப்பு தெரிகிறது என கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனைக் கேட்ட நெல்சன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். ஆனால் ஒரு சிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என கூறி வருவதால் தற்போது நெல்சன் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.