ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களை இயக்கியதன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார், அதன்பிறகு கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.
இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. இதன் காரணமாகவே நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அவருடைய பழைய பேட்டி ஒன்றில், ‘பணம் சம்பாதிக்க தான் சினிமாவிற்கு வந்தேன். என்னதான் நல்ல படங்களை எடுத்தாலும், அதை கொஞ்ச நாள் மட்டுமே பேசுவார்கள். அதன்பின் வந்த தடயமே தெரியாமல் மறைந்து போய்விடும்’.
இப்படி நெல்சன் பேசிய பழைய வீடியோவை தேடி எடுத்து, அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கமல் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் எடிட்டிங் செய்திருக்கின்றனர்.
இதில் கமல், ‘கனவு இருந்தால் மட்டுமே சினிமாவிற்கு வாருங்கள். வியாபாரத்திற்கு வேறு வேறு வழி இருக்கிறது. அதற்காகவே வெவ்வேறு வியாபாரமும் இருக்கிறது. இந்த வியாபாரம் கலை சார்ந்த வியாபாரம்’ என்று கமல் பேசியிருப்பார்.
அத்துடன் போதைப்பொருளுக்கும் நாட்டுப்புற மருந்தை விற்பதற்கு என்ன வித்தியாசம் இருக்கிறதோ, அதுதான் நல்ல கதை இருக்கும் படத்திற்கும் பணம் சம்பாதிப்பதற்காகவே மட்டும் எடுக்கப்படும் படத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
பணத்திற்காக மட்டுமே எடுக்கப்படும் திரைப்படம் எப்படி என்றால், போதைப்பொருள் எப்படி சீக்கிரமாகவே விற்று அதிக லாபத்தை தருகிறதோ அப்படித்தான் இதுவும் என்று நெல்சன் பேசிய பேச்சுக்கு நெட்டிசன்கள் கமலை வைத்து, இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி பங்கம் செய்துகொண்டிருக்கின்றனர்.