சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருஷத்துக்கு முன்னாடி நிறைய மனரிதியான பிரச்சினையில இருந்தாரு அப்போ அந்த பிரச்சினையை மறக்க ஆன்மீக தான் சிறந்தது என்று சென்றுவிட்டார். அந்த நேரத்துல படத்தில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லை ஆனால் நடிக்க மாட்டேன் முடிவெடுத்தார்.
அப்புறம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறுபடியும் நடிக்க வந்தார். அவரோட படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து இந்தியளவில் சூப்பர் ஸ்டார் இன்று வரை இருந்துட்டு இருக்காரு, நிறைய படங்கள் நடித்திருந்தார்.
திடீரென உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்த ரஜினிகாந்த் ரசிகர்களின் உண்மையான வேண்டுதல் காரணமாக யாரும் எதிர்பார்க்காத இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்தார். அப்போது அவர் இனிமேல் நடிக்க மாட்டார் என்ற நிலையில் மறுபடியும் நடிக்கத் தொடங்கினார்.
நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார். அதனால் ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும் இனிமேல் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டது. ஆனால் உடல்நலம் சரியில்லாததால் அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்று அறிவித்தார். பின்னர் யாரும் இல்லாத அளவிற்கு படங்கள் வரிசையாக வர தொடங்கியது.
தற்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. இதற்குப்பின் நடிப்பாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதாவது உடல்நிலை சரியில்லை என்பதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளாராம் ரஜினி இன்னும் 3,4 மாதங்கள் சிகிச்சைக்குப்பின் திரும்பி வந்தால் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை டாக்டர் இதற்குப் பின் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டால் ரஜினி சினிமாவை விட்டு விலகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இந்த சம்பவம் தற்போது நெல்சன் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது.
மேலும் ஜனாதிபதி ஆவதற்கு ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற பேச்சும் அடிபடுகிறது. ரஜினி அவர்கள் கண்டிப்பாக ஜனாதிபதி பதவியை விரும்பமாட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் காணப்படுகிறார்கள். என்ன நடக்கிறது சிறிது காலத்திற்கு பிறகு தெரிய வரும் பொறுத்திருந்து பார்ப்போம்.