உலகநாயகனே வைத்து மிரள விடப் போகும் அனிருத்.. என்ன சங்கதி தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் தீவிர ரசிகன் லோகேஷ் கனகராஜ் என்பதால் கண்டிப்பாக இப்படம் கதையம்சம் சிறப்பாக இருக்கும் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.

தற்போது இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடலை வருகிற 15-ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விக்ரம் படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், அனிருத் இசையில் பாடல் பாடி உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் கத்தி மற்றும் மாஸ்டர் படத்தில் பாடியுள்ளார். தனுஷ் அனிருத் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் பாடல் பாடியுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது கமலஹாசனும் இணைந்துள்ளார். கமலஹாசன் பொருத்தவரை எல்லா விதத்திலும் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்த கூடிய பன்முகத்திறமைசாலி. அதனால் கமலஹாசன் இப்படத்தில் அற்புதமாகப் பாடியிருப்பார் அனிருத்தும் சிறப்பாக இசை அமைத்திருப்பார்.

அதனால் இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள பாடல் கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என கூறி வருகின்றனர். ஏற்கனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலஹாசனின் நடிப்பில் வெளியாகும் விக்ரம் படத்தை குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்தத் தகவலால் உலகநாயகனின் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →